அமெரிக்க அதிபராக இரண்டு முறை பதவி வகித்து வரும் பராக் ஒபாமா விரைவில் ஓய்வு பெறவுள் ளார். புதிய அதிபரை தேர்ந்தெடுப் பதற்கான தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் ஒபாமாவின் செல்வாக்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டிருப்பதாக சமீபத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை நடத்தப் பட்ட இந்த கருத்துக் கணிப்பில் ஒபாமாவுக்கு சுமார் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு முறை அதிபர் பதவி வகித்து வரும் ஒரு வருக்கு இந்த அளவுக்கு ஆதரவு கிடைத்திருப்பது மிகவும் அரிது. 2012-ல் இரண்டாவது முறையாக அவர் அதிபர் பதவியில் போட்டி யிட்ட போது கூட இந்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.
ஒபாமாவுடன் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்து வரும் வெள்ளை மாளிகை ஊடக செய லாளர் ஜோஷ் இயர்னெஸ்ட் கூறும் போது, ‘‘உணர்ச்சிவயப்பட்டு இந்தத் தேர்தலில் எந்த முடிவுக்கும் வரக்கூடாது என மக்களிடம் வலியுறுத்தியதால் தான் அவருக்கு ஆதரவு அதிகரித்தது’’ என்றார்.
இந்தத் தேர்தலுக்காக 10 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 17 பிரச்சாரக் கூட்டங்களில் ஒபாமா பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.