இளவரசி டயானா பற்றிய 6 ரகசியங்கள்

மண்ணை விட்டு மறைந்தாலும் இன்று வரை மக்களின் மனங்களில் ராணியாய் திகழும் இளவரசி டயானாவை பற்றி பல்வேறு விடயங்களை நீங்கள் கேள்விப்பட்டிருந்தாலும், அவரின் சிறுவயது வாழ்க்கை மற்றும் இளமைப்பரும் பற்றி நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவரை பற்றி நீங்கள் அறிந்திராத ரகசியங்கள் இதோ,

இளவரசி டயானாவுக்கு அவரது 9 வயதில் வீட்டுக்கல்வி வழங்கப்பட்டது. இவருக்கு 12 வயது இருக்கும்போது இவரது பெற்றோர் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதால், Norfolk – இல் அமைந்துள்ள ஒரு விடுதியில் தங்கி தனது படிப்பினை தொடங்கினார்

இளவரசி டயானா படிப்பில் புலி கிடையாது. தனது வகுப்பில் சுமாராக படிக்கும் மாணவிகளில் ஒருவர். இவர் தனது 16 வயதில் தான் எழுதிய இரண்டு பாடங்களில் தோல்வியை தழுவினார்.

தனது பள்ளிப்படிப்பை முடித்த இவர், இங்கிலாந்தில் உள்ள சிறுவர்கள் பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றினார்.

Ballet நடனம் என்றால் இவருக்கு கொள்ளை பிரியம். இந்த நடனத்தில் தான் சிறந்து விளங்க வேண்டும் என்பதே இவரது ஆசை. ஆனால், இவர் உயரமானவர் என்பதால் இந்த நடனத்தை தொடர்ந்து கற்க முடியாமல் போனது.

தனக்கு 16 வயது இருக்கும்போது இளவரசி டயானா, சார்லஸை சந்தித்தார். ஆனால் அந்த நேரத்தில் இவரது சகோதரி Sarah Spence என்பவர் சார்லஸ்டன் டேட்டிங் செய்து வந்தார். இவருக்கு 20 வயது இருக்கும்போது சார்லஸை திருமணம் செய்துகொண்டார்.

சார்லஸ் இவரை விட 12 வயதில் மூத்தவர் ஆவார்.

டயானா தனது திருமணத்தின்போது 10,000 முத்துக்கள் பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்தார். டயானா அதிகமாக இளஞ்சிப்பு நிறத்திலான ஆடையைத்தான் அதிகமாக அணிவார்.