கண்ணீர் வடிக்கும் ஹிலாரி ஆதரவாளர்கள்: தேசிய கொடியை கீழே இறக்கிய பரிதாபம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் பின்னடைவை சந்தித்து வருவதால் நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் 244 இடங்களில் முன்னிலையிலும், ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் 215 இடங்களில் பின்தங்கியும் உள்ளார்.

இந்நிலையில் நியூயோர்க் நகரில் உள்ள Javits Center என்ற பகுதியில் ஹிலாரி கிளிண்டன் இன்னும் சற்று நேரத்தில் பொதுமக்கள் மத்தியில் நேரடியாக உரையாட உள்ளார்.

இப்பகுதியில் திரண்டுள்ள அவரது ஆதரவாளர்களில் சில பெண்கள் கண்ணீர் விட்டு தங்களது சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் குறித்து ஹிலாரி ஆதரவாளர்கள் பேசியபோது, ‘இந்த முடிவுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை கிளப்பும் என்ற சந்தேகமும் எழுவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

’அமெரிக்காவில் பொதுமக்கள் மத்தியில் பெருத்த வெறுப்புதன்மை அதிகரித்துள்ளது’ எனக் கூறிய ஹிலாரி ஆதரவாளர் ஒருவர் அவரது கையில் இருந்த அமெரிக்க தேசியக் கொடியை கீழே இறக்கி தனது சோகத்தை பகிர்ந்துக்கொண்டார்.

எனினும், கூட்டத்தில் இருந்த சில ஆதரவாளர்கள் ஹிலாரி வெற்றி பெற இன்னும் வாய்ப்புகள் உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.