தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் ட்ரம்ப் – ஹிலாரிக்கு பின்னடைவா..???

உலகம் முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில்  வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள்.  முடிவுகள் அறிவிக்கப்பட்ட 40மாகாணங்களில் 23 – ல் ட்ரம்ப்பும், 17-ல் ஹிலாரியும் வெற்றி பெற்றுள்ளனர்.

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இடையே முதலில் கடும் போட்டி நிலவி வந்தது. இருதரப்பினரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர்.  ஆனால் சில மணி நேரங்களில் டிரம்ப் தொடர்ச்சியாக முன்னிலை பெற்று வருகிறார்.

இதில், 232 வாக்குகள் அதிகம் வெற்றி பெற்று ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார். ஹிலாரி 209 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

அதிக வாக்காளர்கள் உள்ள டெக்சாஸ், ப்ளோரிடா உள்ளிட்ட மாகாணங்களிலும் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.