அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்

ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலரி கிளின்டன், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மொத்தமுள்ள 538 தொகுதிகளில் 270-ல் வெற்றி பெறுபவர்கள் தான் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்படுவார்கள்

தேர்தலில் ட்ரம்ப்  முண்ணியிலும், ஹிலாரி பின் தங்கியும் வருவதால், நாடெங்கிலும் உள்ள ஹிலாரியின் ஆதரவாளர்கள் சோகத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் தேர்ந்தலில் அமெரிக்க வாழ் இந்தியர் இலினாய்ஸ் மாகாணப் பிரதிநிதியாக ராஜாகிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் வாக்குகளில் ஹிலரி கிளின்டன் பின் தங்கி வரும் நிலையில் அமெரிக்க பங்குசந்தை  500 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது