ஜெயலலிதா கேட்ட கேள்வி: வியந்து போன மருத்துவர்கள்

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா கண்விழித்ததும் கேட்ட முதல் கேள்வி, தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பது தான் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன் கூறியுள்ளார்.

நடைபெறவிருக்கும், இடைத்தேர்தலை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தொகுதி பிரசாரத்திற்கு வந்த அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் கூறியதாவது,

ஜெயலலிதாவின் நேரடி கண்காணிப்பில்தான் இத்தேர்தல் நடக்கிறது. அவரது அனுமதியுடனும்,ஒப்புதலு டனும்தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ள னர்.முதல்வர் ஜெயலலிதா கண் விழித்ததும் கேட்டது தமிழக மக்களை பற்றியும், கட்சியின ரையும் பற்றிதான்.

இப்படி தொடர்ந்து உழைத்து கொண்டிருக்கிற அவரை பார்த்து மருத்துவர்களே வியந்து போனார்கள்.

மேலும், அவரது நேரடி பார்வையில் தான் அறிக்கைகள், அரசு பணிகள், மக்கள் பணி, கட்சி பணிகள் நடக்கின்றன என்று கூறியுள்ளார்.