மன்னார் கடலோரத்தில் கரையொதுங்கிய அபூர்வ வகை உயிரினம்

மன்னார் தாவில்பாடு கடலோரப்பகுதியில் கடற்பன்றி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த பன்றியானது 5 அடி நீளமும் 450-500 கிலோகிராம் எடை கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

கடற்கரையில் ஏதோ விசித்திரமான பொருள் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து உரிய இடத்துக்கு விரைந்த மன்னார் வனவிலங்கு உதவிப்பணிப்பாளர் அசோக ராஜபக்ஷ இவை அரிய வகையிலான கடற் பன்றி எனபதனை தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் மன்னார் வனவிலங்கு உதவிப்பணிப்பாளர் அசோக ராஜபக்ஷ தெரிவிக்கையில்

இவ்வகை கடற் பன்றியானது இலங்கைக்கு மிகவும் அபூர்வமான தொன்றாகும்.

இலங்கையின் கடற் பரப்பில் அரிய வகையிலேயே கடற் பன்றிகளே காணப்படுகின்றன

எமது நாட்டுக்கென்றே மொத்தமாக 8 கடற்பன்றிகளே உரித்துடவையாகும். அவற்றுள் பாதி அழிவை எதிர்நோக்கியுள்ள நிலையில் தற்போது மிகுதியும் வெகுவாக அழிந்துக் கொண்டு வருகின்றது

தற்போது இவை அழிவடைவதற்கான காரணம் தெரியவில்லை . இருப்பினும் எதிர் காலத்தில் இதுப் போன்ற உயிரினங்கள் அழிவடைவதை தவிர்க்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என தெரிவித்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.