தேர்தலில் தோல்வி அடைந்தால் வருந்துவீர்களா? டொனால்ட் டிரம்ப் கூறிய அதிரடி பதில்

அமெரிக்க ஜனாபதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வருகிறார்.

பாக்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் டிரம்பிடம் நிருபர்கள் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ‘இந்த தேர்தலில் எனக்கு நானே வாக்களிக்கப்போகிறேன்’ என நகைச்சுவையாக தொடங்கியுள்ளார்.

‘நாடு முழுவதும் பிரச்சாரம் சென்றபோது பொதுமக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. நிச்சயமாக வாக்காளர்கள் என்னை வெற்றி பெறச் செய்வார்கள்’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘தேர்தலில் தோல்வி அடைந்தால் அதற்காக வருந்துவீர்களா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு சிறிதும் தயங்காத டிரம்ப், ‘ஒருவேளை தோல்வி அடைந்தால், எனது பொண்ணான நேரத்தை வீணாக செலவிட்டதற்காக வருந்துவேன்.

சொந்தமாக உழைத்து சம்பாதித்த சுமார் 66 மில்லியன் டொலரை செலவழித்தற்காக வருந்துவேன்’ என பதிலளித்துள்ளார்.

’இறுதியாக வாக்காளர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?’ எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த டிரம்ப் ‘அமெரிக்காவில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. திறமைசாலிகள் உள்ளனர். கணக்கில் அடங்காத வளங்கள் இருக்கின்றன.

இவை அனைத்தையும் சரியாக பயன்படுத்தி அமெரிக்காவை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல அனைவரும் சென்று வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்வதாக டிரம்ப் பேசியுள்ளார்.