வெள்ளகாரருக்கு பொய் சொன்ன யாழ் பொலிஸ் அதிகாரி சிக்கினார்!!முழி பிதுங்கி நின்ற பரிதாபம்!!

யாழ்.மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவாக இடம்பெறுவதாக யாழ்.பொலிசார் பிரித்தானியாவின் அமைச்சரிடம் கூறிய பொய் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

யாழ் விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய அமைச்சரவைம் குழு, பொலிசாரிடம் யாழில் குற்றங்கள் அதிலும் பொதுவாக பெண்கள் மீதான வன்முறைகள் எத்தனை பதிவாகியுள்ளது என்று கேட்டுள்ளார்கள்.

பொலிசார் ஒரு எண்ணிக்கையை காண்பித்து இது தான் என்றும். யாழில் மிக மிக குறைவாகவே வன்முறைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்கள்.

பிரித்தானியாவின் வெளியுறவு மற்றும் கொமன்வெல்த் விவகாரங்களுக்கான அமைச்சரும், பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விசேட பிரதிநிதியுமான ஜொய்ஸ் அன்லெய் தலைமையிலான குழுவினர் இன்று காலை, அரச சார்பற்ற நிறுவனமான வின் என்று கூறப்படுகின்ற நிலையத்திற்கும் விஜம் செய்தார்கள்.

அவர்களிடம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் எத்தனை பதிவாகியுள்ளது என்று அதே கேள்வியைக் கேட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் பதிவான வன்முறைகளை பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில். அதனை விட கூடிய முறைப்பாடு தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்தது.

இதனால் பிரித்தானிய அமைச்சர்கள் அதிர்ந்து போனார்கள்.

அப்போது அங்கே இருந்த பொலிஸ் அதிபர், என்ன செய்வது என்று தெரியாமல் திறு திறு என்று நின்றிருந்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.