கார்த்திகை முதல்நாள் நீராடல்

மயிலாடுதுறை இடப தீர்த்தத்தில், கார்த்திகை முதல் நாளில் நடைபெறும் புனித நீராட்டம் ‘முடவன் முழுக்கு’ என்று அழைக்கப்படுகிறது. ஒருமுறை முடவன் ஒருவன், காவிரியில் நீராடுவதற்காக மயிலாடுதுறை காவிரி தீர்த்தத்திற்கு வந்தான்.

ஆனால் அவன் வந்து சேர்ந்த போது ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் நாள் பிறந்து விட்டது. இதனால் வேதனை அடைந்த முடவன், தன்னுடைய நிலையை எண்ணி வருந்தினான். மேலும் இதுபற்றி சிவபெருமானிடம் முறையிட்டான். தன் பக்தனின் வேதனையை உணர்ந்த ஈசன், ‘நீ போய் காவிரியில் மூழ்கு. உனக்கும் முக்தி கிடைக்கும்’ என்று அருளினார்.

அதன்படியே முடவனும் கார்த்திகை முதல் நாளன்று, காவிரியில் நீராடி இறைவனை வழிபட்டான். அவனுக்கும் முக்தி கிடைத்தது. இதுவே ‘முடவன் முழுக்கு’ என்று கூறப்படுகிறது.