லிப்ட் கேட்ட பெண்ணை 7 வருடம் சவப்பெட்டியில் அடைத்து வைத்து கற்பழித்த கொடூரன்!

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவது மின்னல் வேகத்தை எட்டிவிட்டது. அறிவியல் மற்றும் ஃபேஷன் வளர்ச்சி அடையாத சென்ற நூற்றாண்டை காட்டிலும், கடந்த நூற்றாண்டு காலமாக தான் இது வானை எட்டும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

நிர்வாணமாக திரிந்த காலத்தில் கூட இந்தளவு பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் நடந்திருக்குமா என தெரியவில்லை. இன்று ஓங்கி வளர்ந்திவிட்ட சமூகத்தில் தான் கொடூரமான செயல்கள் எக்கச்சக்கமாக நடந்துக் கொண்டிருக்கின்றன….

7 வருடங்கள்!

ஒரு நாள் இரவு பயணித்தின் நடுவே, சாலையில் வந்துக் கொண்டிருந்த வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டது தான் கொலீன் ஸ்டான் செய்த பெரிய தவறு. அவரை கடத்தி ஏழு ஆண்டுகள் (1977 to 1984) சவப்பெட்டியில் அடைத்து, கற்பழிக்க மட்டும் வெளியே விட்டு கொடூரமான சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டார் கொலீன் ஸ்டான்.

20 வயது

கடத்தப்பட்ட போது கொலீன் ஸ்டான்-ன் வயது இருபது தான். சாலையில் கொலீன் ஸ்டான் லிப்ட் கேட்ட போது வாகனத்தில் வந்த கேமரூன் – ஹூக்கர் எனும் தம்பதி அழைத்து சென்றுள்ளனர்.

கடத்தல்!

குழந்தையுடன் பயணித்த வந்த அந்த தம்பதியை நம்பி ஏறினார் கொலீன் ஸ்டான். வாகனத்தில் ஏறிய சிறிது நேரத்தில் கத்தியை காட்டி கொலீன் ஸ்டான்-ஐ அந்த தம்பதி கடத்தியுள்ளனர்.

படுக்கையின் கீழே!

கொலீன் ஸ்டான் அந்த தம்பதி தன்னை கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சியுள்ளார். ஆனால், நேர்ந்த கொடுமை அதை காட்டிலும் பலநூறு மடங்கு கொடியது.

கொலீன் ஸ்டான்-ஐ

தங்கள் படுக்கையின் அடியில் சவப்பெட்டி போன்ற ஒரு பெட்டியில் அடைத்து வைத்திருந்துள்ளனர் அந்த தம்பதி.

தப்பினார்!

ஆகஸ்ட் 1984-ல் கொலீன் ஸ்டான் ஒருவழியாக அந்த தம்பதியிடம் இருந்து தப்பினார். கேமரூன்-க்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. வழக்கு நடந்துக் கொண்டிருந்த போது ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என்ற கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.