பெண்களின் நலன் கருதி இங்கிலாந்தில் கன்ட்ராசெப்டிவ் திட்டம்

பாலியல் வன்புணர்வு மூலம் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள திட்டம், இங்கிலாந்தின் ஏனைய பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளது.

அதன் பொருட்டு பிரித்தானிய அரசாங்கத்தால் சுமார் 6.7 மில்லியன் பவுண்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டம் 2013 ஆம் ஆண்டு லன்டனில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனடிப்படையில் பாலியல் வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் ஏனைய பெண்கள் கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் வகையில், கன்ட்ராசெப்டிவ் இம்ப்லான்ட்ஸ் (contraceptive implant) என அழைக்கப்படும் ஒரு வகை கருத்தடை குற்றிகளை உபயோகித்தல் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவை வழங்கப்பட்டு வந்தது.

அதாவது குறித்த குற்றியை கையில் செலுத்திக் கொள்வதன் மூலம், அது புரொஜெஸ்டோஜன் எனப்படும் ஹோர்மோனை வெளிவிடச் செய்து கருவுறுவதிலிருந்து பெண்களை பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், இங்கிலாந்தில் உள்ள சுமார் 13000 பெண்கள் குறித்த திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.