காதலனுடன் ஜாலி… குழந்தைகளுக்கு போதை ஊசி போட்டு தூங்க வைத்த கொடூரம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைச் சேர்ந்த அஷ்லி ஹட் என்ற 24வயது பெண்ணுக்கு 6 வயதில் ஒரு மகனும் 4 மற்றும் 2 வயதில் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அவரது காதலர் போதை வஸ்துகளை பயன்படுவத்துவதாக வந்த தகவலையடுத்து வீட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போலீசார் , அங்கிருந்த ஹெராயின் போதைப் பொருள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

அப்போது குழந்தைகளின் உடலில் போதை ஊசி போட்டதற்கான தடம் இருப்பதைக் கண்டு அதிர்ந்த போலீசார் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

அதில் குழந்தைகளின் உடலில் போதை பொருள் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அஷ்லி ஹட்டின் 6 வயது மகனிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது தாயும் அவரது ஆண் நண்பரும் நெருக்கி பிடித்துக்கொண்டு தனது கழுத்தில், மருந்து என கூறி ஹெராயினை ஊசி மூலம் செலுத்தியதாக தெரிவித்தான்.

இதேபோல் தனது இரு தங்கைகளின் கழுத்திலும் போதை ஊசி போடப்பட்டதாக சிறுவன் கூறினான். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன காவல்துறையினர் உடனடியாக அஷ்லி ஹட்டை கைது செய்து சிறையிலடைத்தனர்.