தந்தையான 12 வயது சிறுவன்

கேரள மாநிலத்தில் 18 வயது பெண்ணின் குழந்தைக்கு 12 வயது சிறுவன் தந்தையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கலாமசரி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 18 வயது பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

18 வயதை எட்டுவதற்கு முன்பே அப்பெண் கர்ப்பமடைந்தது மருத்துவமனைக்கு தெரியவந்துள்ளது. மேலும், அப்பெண்ணை பார்ப்பதற்கு 12 வயது சிறுவன் ஒருவன் வந்துள்ளான்.

பிறந்த குழந்தைக்கு அச்சிறுவன் தான் தந்தை என்பதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்துள்ளது.

விசாரணையில், மேஜராகாத ஒரு பெண், முறைதவறி கர்ப்பம் அடைந்துள்ளதாக புகார் எழுந்ததால், போஸ்கோ சட்டத்தின் கீழ் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் சிறுவன் மீது பிரிவு 75ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இக்குழந்தைக்கு உண்மையான தந்தை சிறுவன் தானா? அல்லது வேறு நபரா? என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.