இன்று அமெரிக்காவில் அதிபர் தேர்தல்!

இன்று அமெரிக்காவில் 58ஆவது அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கிளாரி கிளின்டனும், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரொனால்ட் ரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய கட்டமான தேர்தல் கல்லூரி உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இன்று நடத்தப்படுகிறது. 538 உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் கல்லூரி உறுப்பினர்களில், 270 பேரை எந்தக் கட்சி பெறுகிறதோ, அந்தக் கட்சியின் வேட்பாளரே, அடுத்த அதிபராகத் தெரிவு செய்யப்படுவார்.

இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கிளாரி கிளின்டனை எதிர்த்து குடியரசுக் கட்சி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகின்றார்.

இவர்கள் இருவருக்குமிடையில் கடுமையான போட்டி நிலவுவதுடன், கருத்துக்கணிப்பின்படி கிளாரி கிளின்டனே முன்னிலை வகிக்கின்றார்.

அமெரிக்காவின் 58ஆவது தேர்தல் இது என்பதுன், ஆட்சியமைப்பவர் 45ஆவது அமெரிக்க அதிபராக இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.