சோகத்தில் மூழ்கிய பிரித்தானிய மக்கள்…! ஏன் தெரியுமா…?

பிரித்தானியாவில் வேளைவாய்ப்பில்லாத மக்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் வழங்கி வரும் நிதியுதவி இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பு இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பிரித்தானியா அரசாங்கம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவில் வறுமையில் வாழும் குடும்பங்கள் மற்றும் பிள்ளைகள் இல்லாத தம்பதிகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நிதியுதவி வழங்கிவருகின்றது.

சில விதிமுறைகளின் அடிப்படையில் ஆண்டுக்கு 26 ஆயிரம் பவுண்ஸ்களை வேலையில்லா குடும்பங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கி வந்தது.

இதன் காரணமாக அந்நாட்டு அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதையடுத்து, குறித்த நிதித் தொகையினை குறைக்கப் போவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

இதன்படி, லண்டன் நகரில் வசிக்கும் வேலையில்லா குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 26 ஆயிரம் பவுண்ட் நிதி 23 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், லண்டன் நகருக்கு வெளியிலுள்ள வேலையில்லா குடும்பங்களுக்கு இந்த நிதி 20 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குழந்தைகள் இல்லாத நிலையில் லண்டன் நகரில் வசித்து வந்த குடும்பங்களுக்கு 15410 பவுண்ட் நிதியும், லண்டன் நகருக்கு வெளியே வசித்து வருபவர்களுக் இந்த தொகை 13400 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானிய அரசின் இந்த அறிவிப்பின் காரணமாக நாடு முழுவதுமுள்ள சுமார் 64 ஆயிரம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.