ரணில் 10 இணையத்தளங்களை உருவாக்க நடவடிக்கை?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒரு பில்லியன் ரூபா செலவில் புதிய பத்திரிகையொன்றை ஆரம்பிக்க தேவையான அச்சகமொன்றை அமைத்துள்ளது.

முன்னாள் அமைச்சரும் மஹிந்த சார்பு எம்.பி.யுமான கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை  தெரிவித்துள்ளார்.

இந்த நிதியை முன்னாள் மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜுன மஹேந்திரனின் மருமகன் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டி புஷ்பதான பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகிலுள்ள பிரபல இணையத்தள செயற்பாட்டாளர்கள் 10 பேரை அடுத்த மாதம் நாட்டுக்கு வரவழைத்து, 10 இணையத்தளங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பயண ஏற்பாட்டுக்காக ஹெலிகொப்டர் ஒன்றை இறக்குமதி செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கெஹலிய எம்.பி. தனதுரையில் தெரிவித்துள்ளார்.