இலங்கையில் சர்வதேச விசாரணைகள் அவசியம் இல்லை! ஜனாதிபதி மைத்திரி

இலங்கையின் போர் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியம் இல்லை என்பதை சர்வதேச சமூகம் இன்று உணர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மஹரகமையில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நீதிபதிகள் இலங்கையின் விசாரணைகளுக்கு அவசியம் இல்லை என்பதையும் சர்வதேசம் நம்புவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றத்துக்காக சர்வதேச நீதிமன்றத்தை இலங்கையில் அமைப்பது என்ற விடயம் தற்போது மூடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளையும் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்க முடியாது.

இந்தநிலையில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் சர்வதேசம் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.