அகதிகள் சென்ற வாகனம் மீது குண்டுவீச்சு – 18 பேர் பலி!

ஈராக் நாட்டின் வடபகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள மோசூல் நகரை மீட்பதற்காக அங்கு அரசுப்படைகள் ஆவேச தாக்குதல் நடத்தி வருகின்றன.

இருதரப்பு தாக்குதலுக்கு இடையில் சிக்கியுள்ள மக்கள் உயிர்பயத்துடன் தங்களது வசிப்பிடங்களைவிட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

அவ்வகையில், மோசூலில் இருந்து சுமார் 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹாவிஜா என்ற இடத்தில் வசித்துவந்த பலர் ஒரு லாரியில் ஏறி, பக்கத்து நகரமான அல் ஆலம் நகருக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சாலையோரத்தில் இருந்து சிலர் வெடிகுண்டுளை வீசி நடத்திய தாக்குதலில் அகதிகளாக சென்று கொண்டிருந்த 17 பேரும் வேறொரு வாகனத்தில் அவர்களுக்கு பாதுகாப்பாக சென்ற ஒரு போலீஸ்காரரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.