ஆசிரியையை நாக்கால் காலணியை சுத்தம் செய்ய வைத்த பொலிசார்! உயிரை விட்ட பெண்

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரை பொலிசார் காவல் நிலையத்தில் வைத்து காலணியை நாக்கால் சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 30 வயதான Manoj Purohit என்னும் ஆசிரியை தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்க முடியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தின் மூலமே குறித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறித்த கடிதத்தில் அவரது தற்கொலைக்கு ஐந்து பொலிசார் மற்றும் பத்திரிக்கையாளர் ஒருவரை குற்றம் சாட்டியுள்ளார்.

சிவபுரி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் Manoj Purohit தனியார் பஸ் சேவை ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் பஸ் சேவை தொடர்பாக பொலிசாருக்கும் Manoj Purohitக்கும் விவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பொலிசார் சூதாட்ட புகாரில் Manoj Purohitயை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி நாக்கால் காலணியை சுத்தம் செய்ய சொல்லி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இதனால், மனமுடைந்த Manoj Purohit விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். தற்போது, கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஆறு பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.