உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் இவர்கள் தான்

தங்கள் திறமையாலும், கடின உழைப்பாலும் அடிமட்டத்திலிருந்து உச்சத்தை தொட்டவர்கள் ஏராளம்.

அப்படி உச்சம் தொட்டு இன்று (2016) உலகின் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ள கோடீஸ்வரர்களின் பட்டியல்

Bill Gates – 75 billion

தொழிலதிபர், நிர்வாகி, கொடையாளி, புரோக்ராமர் என பல முகங்கள் கொண்ட பில்கேட்ஸ் கடந்த 1975 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்டின் நிறுவனராவார்.

கடந்த 2000வது ஆண்டு வரை மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த இவர் பின்னர் தலைமை பென்பொருள் கட்டமைப்பின் தலைவராக பெறுப்பேற்றார். இவர் பல வருடங்களாக உலகின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதல் இடம் வகிக்கிறார்.

 

Amancio Ortega – 67 billion

ஸ்பானீஷ் தொழிலதிபரான அமேன்சியோ 1963 ஆண்டு சிறிய துணி கடை திறந்ததன் மூலம் தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் 1975ல் மிகப் பெரிய அளவில் ஒரு துணி நிறுவனத்தை தொடங்கிய இவர் அதன் கிளைகளை ஸ்பெயின் நாடு முழுவதும் விரிவுபடுத்தினார்.

பின்னர் பல்வேறு வேறு நாடுகளில் துணி வியாபாரத்தை உருவாக்கினார். பின்னர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்ட அவர் அதிலும் வெற்றி கண்டு இன்று உலகின் இரண்டவது பணக்கார மனிதர் என்ற உயரத்தை தொட்டிருக்கிறார்.rich2

 

Warren Buffett – 60.8 billion

ஐக்கிய அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரும், முதலீட்டாளருமான வாரன் பபெட் பங்கு சந்தையில் முதலீடு செய்யும் பெரும் முதலாளிகளில் அதிக இடங்கள் பிடித்து முன்னணியில் இருக்கிறார்.

Berkshire Hathaway ஏன்னும் நிறுவனத்துக்கு தலைவராக இருக்கும் இவர் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டு இன்று உச்ச நிலையை அடைந்திருக்கிறார்.

இவரின் Berkshire Hathaway நிறுவனத்தின் பங்குகள் கோக கோலா, ஐபிஎம் போன்ற மிக பெரிய நிறுவனத்துடன் அதிகம் இருக்கிறது.rice3

 

Carlos Slim Helu – 50 billion

யார் மெக்ஸிகோவில் இருந்தாலும், இவரது நிறுவனத்துக்கு எதாவது ஒரு வகையில் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள்.

டெலிகாம், சுற்றுலா, எண்ணெய் என 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இவருக்கு இருக்கிறது. இவர் தனது 14 வயதில் லெபனான் நாட்டில் இருந்து மெக்சிகோவுக்கு இடம் பெயர்ந்தவர்.

சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர். சில பில்லியன் டாலருக்கு மேல் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளார்.

இவர் இரண்டு முறை உலக பணக்காரர்களின் வரிசையில் முடஹ்ல் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.rice4

 

Jeff Bezos – 45.2 Billion

அமேசான் நிறுவனரான இவர் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கிவரும் முன்னணி இணையதள விற்பனை நிறுவனமான அமேசான் நிறுவனத்தை நிறுவியவர்.

புத்தக விற்பனையில் தொடங்கிய இந்த நிறுவனம், இவரது வழிகாட்டுதலில் நாளடைவில் பல தயாரிப்பு களின் ஆன்லைன் விற்பனையில் உலகளவில் பெரிய சில்லறை விற்பனை நிறுவனமாக மாறியுள்ளது.

1994 வரை கம்பெனியில் வேலை செய்த இவர் பின்னர் அதை விட்டு அமேசான் கம்பெனியை நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.rice5