நிர்வாண படத்தை வெளியிட்ட பிரபல மொடல் அழகிக்கு நேர்ந்த துயரம்

அமெரிக்காவில் பிரபல மொடல் அழகி ஒருவர் பெண் ஒருவரை நிர்வாணமாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

29 வயதான பிளேபாய் மொடல் அழகி Dani Mathers இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த யூலை மாதம் Dani Mathers, உடற்பயிற்சி கூடத்தின் லாக்கர் அறையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருந்ததை தெரியாமல் படம் பிடித்துள்ளார்.

பின்னர் தனது Snapchat சமூக வலைதள பக்கத்தில் ‘If I can’t unsee this then you can’t either.’ என்ற தலைப்புடன் பெண் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்த பலர் அவரை கடுமையாக விமர்சித்திருந்தனர். இதைதொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்ட குறித்த பதிவை நீக்கினார்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய புகைப்படம் குறித்து சம்பவம் நடந்த LA Fitness உடற்பயிற்சி மையம் பொலிசில் புகார் அளித்துள்ளது. மேலும். Dani Mathers உறுப்பினரிலிருந்து நீக்கியுள்ளது.

தற்போது, குறித்த புகைப்படத்தில் இருந்தவர் 70 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், Dani Mathers குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 6 மாத சிறைதண்டனையும், 1000 டொலர் அபராதமும் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.