உறவுக்கு மிரட்டிய காதலி: காதலன் எடுத்த விபரீத முடிவு!

தமிழகத்தில் மிரட்டி உறவு வைக்கச் சொன்ன காதலியை காதலன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் சென்னை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி சுதா(58). இவர் தன்னுடைய கணவனை பிரிந்து 30 ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார் . அவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றதால் மனைவியுடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் லட்சுமி சுதாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கார்த்திகேயன் மசாஜ் சென்டர் வைத்திருப்பதால சுதாவும் அடிக்கடி அங்கு சென்று வந்துள்ளார். இதனால் பழக்கம் அதிகமாகி, நாளைடைவில் இது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

சுதா வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் இருவரும் அவ்வப்போது உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கார்த்திகேயனுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக அவர் சுதாவுடன் இருந்த பழக்கத்தை துண்டித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சுதா திடீரென கார்த்திகேயனை வீட்டிற்கு அழைத்துள்ளார். வீட்டிற்கு சென்ற அவரிடம் சுதா உறவு வைக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் கார்த்திகேயனோ இதற்கு மறுத்துள்ளார். அதற்கு சுதா தன்னுடன் உறவு வைத்துக்கொள்ளவில்லை என்றால் வீட்டில் கூறிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து வெளியில் தெரிந்தால் தலை காட்ட முடியாது என்பதற்காக சுதாவை கத்தியில் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.