திரைப்பட விழாவில் நடந்தது என்ன? பிரித்தானிய இளவரசிக்கு காயம்!

பிரித்தானியாவில் கடந்த வியாழக்கிழமை இரவு லண்டனின் மத்திய பகுதியில் A Street Cat Named Bob என்ற திரைபடத்திற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பிரித்தானிய இளவரசியான Catherine சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அன்று இரவு அங்கு வந்த அவர் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, படத்தின் இயக்குநரிடமும் சிறிது நேரம் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் அப்படத்தின் நாயகனாக கருதப்பட்ட பூனைக்குட்டியையும் பாசமாக தடவிக் கொடுத்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவியது.

இந்நிலையில் Catherine பிரித்தானியாவின் போதை பழக்கம் மற்றும் மன உளைச்சல் போன்றவற்றிற்கு ஆளாகியுள்ள பெண்கள் மைத்திற்கு திடீரென விஜயம் செய்தார்.

அங்குள்ள அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது அவருடைய இடது கையில் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு அவர் பிளாஸ்திரி போட்டு சிகிச்சை மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது குறித்து அவர் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் இக்காயத்திற்கு நேற்று திரைப்பட நிகழ்ச்சியில் பூனைக்கு அவர் பாசமாக தடவி கொடுத்த போது அது கீறி விட்டிருக்கலாம் என யூகிக்கப்படுவதாக பிரபல தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இம்மகளிர் மையத்திற்கு Catherine பல நிதிஉதவிகளை செய்து வருகிறார் என்றும், வழக்கம் போல தன்னுடைய நேர்த்தியான உடையான கருப்பு நிற உடை மற்றும் அதன் மேல் அவர் அணிந்திருந்த சிமெண்ட் நிற கோட் அருமையாக இருந்ததாக கூறியுள்ளனர்.

இதற்கிடையில் அம்மகளிர் மையத்திற்கு உள்ளே செல்லுவதற்காக காரை விட்டு அவர் கீழே இறங்கிய போது தண்ணீர் பாட்டில் கீழே விழுந்துள்ளது. அதை அவரே கீழே குனிந்து எடுத்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

may