பல்கலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பதில் தலைவர் பேராசிரியர் எஸ்.எம். குணரட்ன தெரிவித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் தற்பொது சுமார் 27500 மாணவர்கள் பல்கலைகலைக்கழகங்களில் உள்ளீர்க்கப்படுகின்றனர். பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட பிள்ளைகளை பல்கலைக்கழகத்தில் சேர்க்க வேண்டும் என்பதையே பெற்றோர் எதிர்பார்ப்பதாக அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நேரிட்டுள்ளது.
மக்களின் வரியைக் கொண்டே மாணவர்கள் உயர் கல்வியை கற்கிக்கின்றார்கள். பல்கலைக்கழக கட்டமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியமானது, மதிநுட்பமான சமூகமொன்றையே கட்டியெழுப்ப வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.







