அழகான குடும்பத்தின் கணவன் மனைவியாக அஜித்தும் காஜலும்!

வீரம் படத்திற்கு பிறகு அஜித்தை வைத்து சிவா இயக்கியிருந்த வேதாளம் படத்தில் லக்ஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த வேதாளம் கடந்த 2015 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்களின் வரவேற்பால் பிரமாண்ட வெற்றி பெற்றது.

இந்நிலையில் மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துக் கொண்டிருக்கும் ‘ #ஏகே57’ திரைப்படத்தின் குழு வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, இந்தியாவுக்கு வந்ததும் செய்திகளும் வந்தபடி இருக்கின்றன. அஜித் ஒரு சிபிசிஐடி ஆபீஸர் என்பதும், அவர் அக்‌ஷராவுடன் இணைந்து வேலை செய்கிறார் என்பதும் இதுவரை வெளியான தகவல். அப்போது காஜல் அகர்வாலுக்கு என்ன ரோல் என்ற கேள்விதான் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

அந்த கேள்விக்கான பதிலை காஜல் அகர்வால் கொடுத்த பேட்டியில் தெளிவாகக் கூறிவிட்டார். ‘படத்தில் நான் அஜித்தின் மனைவியாக நடிக்கிறேன். அழகான குடும்பத்தின் கணவன் மனைவியாக நானும் அஜித்தும் நடிக்கிறோம்’ என்று சொன்னதுடன், வழக்கம்போலவே அஜித்தைப்பற்றி அனைவரும் சொல்லும் டவுன் டூ எர்த், பழகுவதற்கு எளிமையானவர் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டார்.