வானில் ஓர் அதிசயம்.. பூமியை நெருங்கும் நிலா

வாஷிங்டன்: வானில் வரும் 14ஆம் தேதி ஒரு அதிசயம் நடைபெற இருக்கிறது. பவுர்ணமி நாளான அன்று நிலவு தனது சுற்றுவட்டப்பாதை பூமிக்கு மிக அருகே வரவுள்ளது. இதனால் அன்றைய நாள் ‘super moon’ அதாவது நிலா மிகப் பெரியதாக காணப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1948ஆம் ஆண்டுக்கு பின்னர் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு நிலா பூமியை நெருங்குகிறது. இதனால் வரும் 14 ஆம் தேதி வழக்கத்தை விட நிலவு பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியும் என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது இந்த பெரிய நிலாவைக் காண தவறினால் நீங்கள் 2034ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்!