சீனா கிளம்பும் இலங்கையின் சாதனை சிறுவன்! எதற்காக தெரியுமா?

இலங்கையின் சாதனை சிறுவனான Kulisa Saranath Nanayakkara ஆசிய செஸ் மற்றும் உலக செஸ் கூட்டமைப்பு நடத்தும் “அண்டர்-14” ஆசிய கிண்ண செஸ் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

கடந்த யூன் மாதம் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற Asian Schools Chess Championship போட்டியில் அசத்திய Kulisa Saranath Nanayakkara 3வது இடம் பிடித்தார்.

இதைத் தொடர்ந்து ரஷ்யாவின் காந்தி-மன்சிய்ஸ்க் நகரில் கடந்த செப்டெம்பர் 19 முதல் அக்டோபர் 4 வரை நடைபெற்ற World Youth Chess Championship போட்டியில் சாதனை படைத்தார்.

இந்நிலையில் சீனாவின் ஜியாசிங் நகரில் எதிர்வரும் 5ம் திகதி முதல் 12 திகதி வரை நடக்கும் Asian Nations Cup Chess Team Championship போட்டியில் பங்கேற்கும் அணியில் Kulisa Saranath Nanayakkara சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் செஸ் வரலாற்றில் உலக செஸ் கூட்டமைப்பினால் வழங்கப்பட்ட அரினா கிராண்ட் மாஸ்டர் (AGM – Arena Grand Master) பட்டத்தை வென்ற முதல் வீரர் Kulisa என்பது குறிப்பிடத்தக்கது.