14 வயது சிறுமி கோடரியால் வெட்டிக் கொலை!

மராட்டிய மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்துக்குட்பட்ட டிலோன்டா கிராமத்தை சேர்ந்தவர் நிலேஷ் கர்ப்பாடா(19) என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

தனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி அந்த சிறுமியிடம் நிலேஷ் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால், அவரை அந்த சிறுமி தொடர்ந்து நிராகரித்ததால் ஆத்திரம் அடைந்தார்.

இந்நிலையில், கர்வாடா கிராமத்தின் அருகேயுள்ள சைவான் சாலையில் அந்த சிறுமி தனியாக நடந்து செல்வதை கண்ட நிலேஷ், அவரை வழிமறித்து, கோடரியால் துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றார்.

இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் விரைந்துவந்த பொலிசார், சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் குற்றவாளியான நிலேஷ் கர்ப்படாவை தேடி வருகின்றனர்.