போர்ப்ஸ் பட்டியலில் இடபிடித்த தோனி!

விளம்பர உலகில் கொடிகட்டிப்பறக்கும் விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலை சமீபத்தில் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி 10வது இடத்தை பிடித்துள்ளார்.

உலகின் ‘மிகவும் மதிப்புமிக்க 40 விளையாட்டு வீரர்கள்’ பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்திய விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி மட்டும் தான். இந்த பட்டியல், “பிராண்ட் வேல்யூ” (விளம்பர ஒப்பந்தங்கள்)  அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளது. தோனியின் பிராண்ட் வேல்யூ11 மில்லியன் அல்லது 73 கோடியாகும். இந்த பட்டியலில் ஸ்விட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (36 மில்லியன் டாலர்), முதலிடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.