இலங்கைத் தமிழர் சுவிஸில் மரணம்! இவரது உடல் உறுப்புக்கள் தானம்

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தின் அருகே செவ்வாய் அன்று இரவு (25.10) இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

சுவிட்ஷலாந்தில் நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாகி தமிழர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தின் அருகே செவ்வாய் அன்று இரவு (25.10) இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.

29 வயது மதிக்கத்தக்க அந்த நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அனுப்பபட்ட போதிலும், பின்னர் வைத்தியசாலையில் மறுநாள் மதியம் அவர் மரணமாகி உள்ளார்.

துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது..

உயிரிழந்த நபர் இலங்கையில் வவுனியா குருமன்காடு பகுதியை சேர்ந்த 29 வயதான கார்த்திக் பாலேந்திரன் என்பவர் ஆவார்.

இவரது குடும்பம் சுவிஸ் அரசினால் அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, வாழ்விட உரிமை வழங்கப்பட்ட நிலையில் சுவிசில் வசித்து வருகின்றனர்.

உயிரிழந்த கார்த்திக் பாலேந்திரன் இவரின் பெற்றோருக்கு ஒரே ஒரு ஆண் மகன், ஏனையோர் பெண் பிள்ளைகள்.

மேலும் உயிரிழந்த இவரின் உடல் உறுப்புக்களை, இவரது பெற்றோர் சுவிசில் தானம் செய்துள்ளதாக தவல்கள் அறியப்படுகின்றன.unnamed-1 unnamed-2 unnamed-3-620x826 unnamed-620x826