ஸ்னப்சட் நிறுவனம் தனது பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைச் சேமிப்பதற்கு இவ்வாறு கட்டணம் வசூலிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரபல செயலியான ஸ்னப்சட் கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
5 ஜிபிக்கும் மேற்பட்ட விடயங்களை சேமித்து வைக்கப் பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஸ்னப்சட் பயனர்கள், சமூக ஊடகங்களில் நிறுவனம் பேராசை கொண்டதாக செயற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.







