வவுனியா, செட்டிகுளம் பகுதியில் 86 கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கிரிபத்கொட காவல் பிரிவில் ரி-56 துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த இரண்டு சந்தேக நபர்கள் தொடர்பான தகவல்கள் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, அந்த விசாரணையுடன் தொடர்புடைய, 10 கைக்குண்டுகளை முகத்துவாரம், அளுத்கமவில் காவல்துறையினர் நேற்று (30) கண்டுபிடித்துள்ளனர்







