விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2024ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தங்கமகள்.
வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த சீரியல் ஆகஸ்ட் 2025, 479 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரில் முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனதை வென்றவர் தான் யுவன் மயில்சாமி.
பிரபல நடிகர் மயில்சாமியின் மகன் என்ற அடையாளம் இருந்தாலும் தங்கமகள் சீரியல் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிவிட்டார்.
தங்கமகள் சீரியலை தொடர்ந்து யுவன் மயில்சாமி புதிய தொடரில் கமிட்டாகியுள்ளார்.
Chinni தெலுங்கு சீரியலின் தமிழ் ரீமேக்கில் தான் அவர் நடிக்க உள்ளாராம். விஜய் டிவியில் விரைவில் வரப்போகும் இந்த புதிய தொடரில் நாயகியாக வினுஷா தேவி நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
ஆனால் தொடர் எப்போது ஒளிபரப்பாக தொடங்கும் என்ற விவரம் ஒன்றும் வெளியாகவில்லை.







