கண்டி நகருக்கு சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களில் ஐந்து மாணவர்கள் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹம்பாந்தோட்டை பிரதேச பாடசாலை மாணவர்கள் குழுவொன்று கண்டிக்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர்.
இதன்போது, அவர்களில் ஐந்து மாணவர்கள் திடீரென மயங்கி விழுந்ததையடுத்து, கண்டி வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவர்கள் பேராதனை தாவரவியல் பூங்காவை பார்வையிட்ட பிறகு, வெளியே வந்து அருகிலுள்ள கடைகளில் சிற்றுண்டி மற்றும் பால் போன்றவற்றை வாங்கி உட்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த உணவை உட்கொண்ட மாணவர்கள் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.







