ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா !

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெறுகிறது.

கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்த விழா நடைபெறும்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளன.