மரக்கறிகளின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

உள்ளூர் சந்தையில் தற்போது மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய விலைப்பட்டியலுக்கு அமையை, ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 1,200 முதல் 1,300 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், ஒரு கிலோ கிராம் போஞ்சி 300 முதல் 450 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையிலும், தக்காளி ஒரு கிலோகிராம் 150 முதல் 170 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

நுவரெலியா, உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராம் 230 முதல் 250 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையிலும், வெலிமடை உருளைக்கிழங்கு 200 முதல் 220 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், செத்தல் மிளகாய் ஒரு கிலோ கிராம் 620 முதல் 630 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையிலும், ஒரு கிலோ கிராம் இஞ்சி 600 முதல் 700 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.