தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

தங்கத்தின் விலை இன்றைய தினம் சிறியளவில் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை நகையக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த 9 ஆம் திகதி 7 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்த தங்கத்தின் விலை நேற்றுவரை மாற்றமின்றி இருந்தது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 300,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டதுடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 277,500 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், இன்றைய (12) நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 299,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 276,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக இலங்கை நகையக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.