யாழில் tiktok தொடர்பில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த இளைஞன்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் tiktok ஊடாக தொடர்பை ஏற்படுத்திக் கொண்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைபாடளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டிற்கு அமைய, துன்னாலைப் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.