துப்பாகிச்சூட்டு சம்பவம் சிறுவன் கைது!

கடந்த மாதம் பொரளை சீவலியாபுரவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த சந்தேக நபர், சிறப்பு அதிரடிப் படையினரால் (STF) நடத்தப்பட்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவுடன் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.