நேபாளத்தில் ஏற்ப்பட்டுள்ள பதற்ற நிலை தொடர்பில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும், நேபாளத்தின் காத்மண்டு விமான நிலையத்திற்குமிடையிலான அனைத்து விமான சேவை நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சமூக ஊடகங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடை தொடர்பாகத் தலைநகர் காத்மண்டு உட்பட நேபாளம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை அதிகரித்ததையடுத்து நேபாளத்தின் ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.