வெறும் வயிற்றில் சுரக்காய் சாறு குடிங்க எந்த கெட்ட நோயும் கிட்ட வராது!

சுரைக்காய் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. சிலர் இதை சாப்பிட மறுப்பார்கள். ஆனால் இதில் இருக்கும் சத்துக்கள் தெரிந்தால் யாரும் இதை விட்டு கொடுக்க மாட்டார்கள்.

சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது உடல் சூட்டை குறைத்து, நீரேற்றமாக இருக்க உதவுகிறது. சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

மேலும், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கெட்ட உப்புகளை வெளியேற்றவும், கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தவும் இது உதவுகிறது.

எனவே பல நிபுணர்கள் கூறுகிறார்கள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுரக்காய் சாறு குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. அதனால் நமக்கு சில நோய்கள் வராது என்று கூறுகின்றார்.

காலை வெறும் வயிற்றில் சுரக்காய் சாறு
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவும் – சுரக்காயில் மற்றைய காய்கறிகளை விட பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. இது இரத்த அழுத்தத்தை உடலில் சீராக பராமரிக்க உதவுகிறது.

இதில் இருக்கும் நார்ச்சத்து நமது உடலில் கெட்ட கொழுப்பை தங்க விடாது. இதனால் நமது இதய ஆரோக்கியம் ஒட்டு மொத்தமாக பாதுகாக்கப்படும்.

குறிப்பாக இதய ஆரோக்கியத்தை பராமரிக்க சீரான இரத்த அழுத்தம் மற்றும் இதய நரம்புகளில் படிந்திருக்கும் இரத்த கொழுப்பை குறைக்க காலையில் சுரக்காய் சாறு குடிப்பது சிறந்தது.

எடை இழப்பை ஊக்குவிக்கிறது – இந்த காயில் கலோரிகள் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், எடை இழக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த உணவாகும்.

பொதுவாக நார்ச்சத்து நிரம்பிய உணவுகளை சாப்பிட்டால் வயிறு நிரம்பிய உணர்வு உண்டாகும். இந்த சுரக்காயிலும் அதிக அளவில் நார்ச்சத்து நிரம்பி இருக்கிறது.

இது உடலில் வயிறு நிரம்பிய உணர்வை கொடுப்பதால் நமது உடல் எடை குறைய அதிக வாய்ப்பு உள்ளது.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது – சுரக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தரக்கூடிய ஒரு காய் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் நம் உடலில் இரத்த சக்கரை அளவு கட்டுப்பாட்டுடன் இருக்கும்.