பார்க்கவிக்காக உயிரை விட துணியும் ஜீவானந்தம்!

எதிர்நீச்சல் சீரியலில் பார்கவி மற்றும் ஜீவானந்தம் ஆபத்தான நிலையில் இருக்கும் அதே வேளை ஜீவானந்தம் தன் உயிரை பார்கவிக்காக பணையம் வைக்கிறார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அறிவுக்கரசி தன் தங்கையை தர்ஷனுக்கு திருமணம் செய்து வைக்க தடபுடலாக தயாராகி கொண்டு வருகிறார்.

இது மற்றைய மருமகள்களுக்கு பிடிக்கவில்லை. இந்த திருமணம் நடந்தாலும் அது அன்புகரசியுடன் இல்லை என ஜனனி புது டுவிட்ஸ்டை கூறியுள்ளார்.

தற்போது குணசேகரன் மற்றும் அறிவுக்கரசி குடும்பத்தினர் திருமணத்திற்கு தயாராகி திருமண மண்டபத்திற்கு சென்றுள்ளனர்.

ஒரு வழியாக ஜீவானந்தம் மற்றும் பார்கவி துரத்தும் கும்பலிடம் இருந்து தப்பித்து ஒரு வீட்டில் தங்கி இருக்கின்றனர்.

இந்த நிலையில் அறிவுக்கரசியின் அடியாட்கள் எப்படியோ பார்கவி ஜீவானந்தம் இருந்த இடத்தை கண்டுபிடித்து அங்கு சென்று விட்டனர்.

இந்த விடயத்தை அறிவுக்கரசியிடம் தெரிவிக்கின்றனர். இதை கேட்ட அறிவுக்கரசி ஜீவானந்தம் மற்றும் பார்கவியை விடிவதற்குள் கொன்றால் நான் பணம் தருகிறேன் என கூறுகிறார்.

இதன் பின்னர் பார்கவியை ஜீவானந்தம் பாதுகாப்பாக வீட்டிற்குள் பூட்டி வைத்து விட்டு தனியே வெளியெ செல்கிறார். அந்த பக்கம் ஜனனியும் சக்தியும் இவர்களை காப்பாற்ற முயற்ச்சி செய்து கொண்டு இருக்கின்றனர்.