கனடாவில் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்பிளக்ட் கனடா என்ற பெற்றோர் அமைப்பினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை அணுகுவதைத் தடுக்கும் புதிய விதிமுறைகளைக் கோரியுள்ளது.
மனநலம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து எழுந்துள்ள சிக்கல்களின் அடிப்படையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிஜ உலகில் சிறுவர்களுக்கு காணப்படும் பாதுகாப்பு இணையத்தில் கிடையாது என பெற்றோர் சுட்டிக்காட்டியுளள்னர்.
இணையத்தில் புகையிலை உற்பத்திகள், போதைப் பொருட்கள் என்பனவற்றை கொள்வனவு செய்யவும் ஆபாச படங்களை பார்வையிடம் முடியும் என தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் நிறுவப்பட்ட அன்பிளாக்ட் கனடா Unplugged Canada, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்ய வேண்டுமென அரசாங்கத்திடம் கோரியுள்ளது.







