பாதையை விட்டு விலகிய பேருந்து மாணவி பலி!

அவுஸ்திரேலியாவில் பாடசாலை பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மாணவி ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இந்த விபத்தில் 11 பேர் வரை காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

குறித்த பேருந்தில் 28 மாணவர்கள் பயணித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.