கொழும்பு –அவிசாவளை பழைய வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளுக்கான அறிவித்தல்!

கொழும்பு – அவிசாவளை பழைய வீதியில் இன்று மற்றும் நாளை விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

நவகமுவ விகாரையில் முன்னெடுக்கப்படும் பெரஹர ஊர்வலத்தை முன்னிட்டு இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 2.30 வரையிலும் நாளை காலை 6 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரையும் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு – அவிசாவளை பழைய வீதி, வெலே சந்தி மற்றும் ரனால சந்தி வரை மூடப்படுவதால் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு வாகன சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.