தமிழர்களின் அன்றாட உணவில் முக்கியமானது இட்லி. அரிசி, உளுந்து கலந்து தயாரிக்கப்படும் இட்லி பல்வேறு ஆரோக்கிய சத்துக்களை கொண்டுள்ளது. தற்போது இட்லியின் நன்மையினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இட்லி
புதிதாக பிறக்கும் நாளில் மனிதர்கள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு காலை உணவு மிகவும் முக்கியமாகும்.
ஆனால் இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் காலை உணவிற்கு பெரும்பாலான நபர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
காலை உணவை தவிர்ப்பது உடல்நலத்தை அவ்வளவு பாதிக்காது என்று நினைத்திருந்தால், அது மிகப்பெரிய தவறாகும்.
ஆம் காலை உணவை தவிர்ப்பதால் நீரிழிவு உட்பட பல நோய்களுக்கு காரணமாக அமைகின்றது. மேலும் அன்றைய நாளில் நாம் செய்ய வேண்டிய வேலைகளும் தடைபடும். இட்லி காலை உணவிற்கு மிகவும் சிறந்ததாகும்.
பயன்கள் என்ன?
இட்லியில் புரதச்சத்துக்கள், அமினோ அமிலங்கள், நார்ச்சத்துக்கள் நிறைவான உள்ளன.
உலகில் உள்ள ஊட்டச்சத்தான உணவுகளில் ஒன்றாக இட்லியை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.
இட்லி எளிதில் செரிமானம் ஆகக்கூடியது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
உடலில் நல்ல இரத்தம் உற்பத்தி அதிகரிக்க இட்லி அற்புதமான உணவாகும்.
இட்லி சாப்பிடுவதால் மூளைகளில் செயல்படும் செல்கள் சுறுசுறுப்படைகின்றது.
வயிற்று கோளாறு, வயிற்றில் புண் இருந்தால் எளிதில் சீரணமாகும் இட்லியை சாப்பிடுவது நல்லது.
நீராவில் வேகவைத்து யெ்யும் உணவாதலால் இட்லியில் கொழுப்புச்சத்து அதிகம் கிடையாது.