நியூயோர்க்கில் நீரில் மூழ்கிய சில பகுதிகள்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் பலத்த மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வெள்ளப் பெருக்கினால் நெடுஞ்சாலைகளுடனான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதனால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.