கணவர் ரெடின் கிங்ஸ்லி குறித்து சங்கீதா ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. கடந்த ஆண்டு இவர் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு பின் சங்கீதா தான் கமிட்டாகி இருந்த தொடர்களில் இருந்து விலகியிருந்தார். இந்த ஜோடிக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சங்கீதா ரெடின் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நாங்கள் திருமணம் செய்துகொண்ட பின் அவர் என்னிடம் கேட்காமல், டிஸ்கஸ் செய்யாமல் எதையும் செய்ததில்லை. நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து தான் அனைத்தையும் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.