அமைச்சர் நேரு தம்பி உள்ளிடோருக்கு ரூ.30 லட்சம் அபராதம்

சென்னை: அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீது, சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.நேரு. இவரது தம்பி என்.ரவிச்சந்திரன். இவர் இயக்குநராக உள்ள, ‘ட்ரூடோம் இ.பி.சி., இந்தியா’ நிறுவனம், 2013ல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் 30 கோடி ரூபாய் கடன் பெற்றது.

இத்தொகையை கடன் பெற்ற நிறுவனம், தன் சகோதர நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதன் வாயிலாக, தங்களுக்கு 22.48 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என, வங்கி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்படி, அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது, 2021ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. பின், அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகன் வீடு, அலுவலகம் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில், சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

சி.பி.ஐ., பதிவு செய்த வழக்கு விசாரணை, எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான கடந்த விசாரணையின் போது, சி.பி.ஐ., வழக்கை அடிப்படையாக வைத்தே, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.